2024ம் ஆண்டு சித்திரை வரைமுட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் 2024ம் ஆண்டு சித்திரை மாதம் 30 ஆம் திகதி வரை இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்காலத்தில் ஒரு முட்டை வாடிக்கையாளருக்கு 35 ரூபாய் விலையில் வழங்கப்படும் எனவும், அதேவேளை சந்தையில் முட்டையின் விலை அசாதாரணமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
முட்டைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. samugammedia 2024ம் ஆண்டு சித்திரை வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,எதிர்வரும் 2024ம் ஆண்டு சித்திரை மாதம் 30 ஆம் திகதி வரை இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இந்நிலையில் எதிர்காலத்தில் ஒரு முட்டை வாடிக்கையாளருக்கு 35 ரூபாய் விலையில் வழங்கப்படும் எனவும், அதேவேளை சந்தையில் முட்டையின் விலை அசாதாரணமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.அத்துடன் எதிர்வரும் நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.