• May 11 2024

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின் அணைக்கட்டில் பாதிப்பு...! களத்தில் இறங்கிய இராணுவத்தினர்...! samugammedia

Sharmi / Dec 16th 2023, 11:18 am
image

Advertisement

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் ஏற்பட்ட பாதிப்பினை சீர் செய்யும் நடவடிக்கை இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பமானது.

புதுமுறிப்பு குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைக்கு இடர் முகாமைத்துவ பிரிவு தயாராகியது.

தொடர் மழை காரணமாக குளக்கட்டில் ஏற்பட்ட மண்ணரிப்பு அவதானிக்கப்பட்டு, நீர்பாசன பொறியியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலை ஏற்படாத நிலையை அவதானித்த பொறியியலாளர்கள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இன்று காலை இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீர்பாசன திணைக்களத்தினர், பொறியியலாளர்களின் கண்காணிப்பில் குறித்த பணிகள் ஆரம்பமானது.

விவசாயிகளும் குறித்த பணியில் ஈடுபட்டனர்.

11 வது கஜபாகு பிரிவினர் 40 பேர் வரை குறித்த பணியில் ஈடுபட்டுள்ளனர். குளக்கட்டின் ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டின் பல பகுதிகளிலும் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின் அணைக்கட்டில் பாதிப்பு. களத்தில் இறங்கிய இராணுவத்தினர். samugammedia கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் ஏற்பட்ட பாதிப்பினை சீர் செய்யும் நடவடிக்கை இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பமானது.புதுமுறிப்பு குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைக்கு இடர் முகாமைத்துவ பிரிவு தயாராகியது.தொடர் மழை காரணமாக குளக்கட்டில் ஏற்பட்ட மண்ணரிப்பு அவதானிக்கப்பட்டு, நீர்பாசன பொறியியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.ஆபத்தான நிலை ஏற்படாத நிலையை அவதானித்த பொறியியலாளர்கள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து, இன்று காலை இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீர்பாசன திணைக்களத்தினர், பொறியியலாளர்களின் கண்காணிப்பில் குறித்த பணிகள் ஆரம்பமானது.விவசாயிகளும் குறித்த பணியில் ஈடுபட்டனர்.11 வது கஜபாகு பிரிவினர் 40 பேர் வரை குறித்த பணியில் ஈடுபட்டுள்ளனர். குளக்கட்டின் ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டின் பல பகுதிகளிலும் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement