பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை 30 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, இந்த தொகை 115 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது.
முன்பு ஒரு சாப்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 85 ரூபாயாக இருந்தது.
அந்தத் தொகைக்கு இனி மதிய உணவு வழங்க முடியாது என்று உணவு வழங்குநர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை அதிகரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.
அந்த உணவுக்காக 115 ரூபாவை ஒதுக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களின் விலைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. கல்வி அமைச்சு எடுத்த நடவடிக்கை.samugammedia பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை 30 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.அதன்படி, இந்த தொகை 115 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது.முன்பு ஒரு சாப்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 85 ரூபாயாக இருந்தது.அந்தத் தொகைக்கு இனி மதிய உணவு வழங்க முடியாது என்று உணவு வழங்குநர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த தொகையை அதிகரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.அந்த உணவுக்காக 115 ரூபாவை ஒதுக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.சந்தையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களின் விலைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.