• Oct 15 2024

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் தொடர்பில் அரசின் அறிவிப்பு

Chithra / Oct 15th 2024, 3:15 pm
image

Advertisement

 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக எண்ணெய் விலை உயரும் பட்சத்தில் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்,

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலையால், எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது.

இது குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்பு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் எண்ணெய் விலையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் இந்தக் குழு முடிவு செய்யும்.

இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த எரிபொருள் கட்டண திருத்தத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் பஸ்களின் கட்டண விலைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளது.

அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது, ஆனால் பஸ் கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, எனினும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படவில்லை.

எனவே, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளித்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் மற்றும் பஸ்களின் கட்டண விலையை குறைக்க முடிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் தொடர்பில் அரசின் அறிவிப்பு  மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக எண்ணெய் விலை உயரும் பட்சத்தில் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்,மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலையால், எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது.இது குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்பு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையின் அடிப்படையில் இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் எண்ணெய் விலையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் இந்தக் குழு முடிவு செய்யும்.இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த எரிபொருள் கட்டண திருத்தத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் பஸ்களின் கட்டண விலைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளது.அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது, ஆனால் பஸ் கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, எனினும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படவில்லை.எனவே, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளித்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் மற்றும் பஸ்களின் கட்டண விலையை குறைக்க முடிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement