மன்னார் முழங்காவில் 19ம் கட்டை பகுதியில் சிறிய ரக உழவு இயந்திரமும் (லான்ட்மாஸ்டர்) அரச பேருந்தும் மோதி விபத்துக்ககுள்ளான சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
லான்ட்மாஸ்டர் ஒன்று சமிஞ்ஞை விளக்கு ஒளிராமல் சென்றுகொண்டிருந்துள்ளது. அதன் பின்னால் அரச பேருந்து சென்றுள்ளது.
எதிரே வேறு ஒரு வாகனம் ஒளியை பாய்ச்சியவண்ணம் வந்த நிலையில், பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லான்ட்மாஸ்டரை மோதியுள்ளது.
இந்த விபத்தில் லான்ட்மாஸ்டர் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதில் பயணித்த இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார் . பேருந்தில் முன்பக்கம் சேதமடைந்துள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்
வீதியில் சென்ற லான்ட்மாஸ்டரை பற்றைக்குள் தூக்கி வீசிய அரச பேருந்து- இருட்டில் சென்றதால் விபரீதம் - ஒருவர் காயம் மன்னார் முழங்காவில் 19ம் கட்டை பகுதியில் சிறிய ரக உழவு இயந்திரமும் (லான்ட்மாஸ்டர்) அரச பேருந்தும் மோதி விபத்துக்ககுள்ளான சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதுஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லான்ட்மாஸ்டர் ஒன்று சமிஞ்ஞை விளக்கு ஒளிராமல் சென்றுகொண்டிருந்துள்ளது. அதன் பின்னால் அரச பேருந்து சென்றுள்ளது. எதிரே வேறு ஒரு வாகனம் ஒளியை பாய்ச்சியவண்ணம் வந்த நிலையில், பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லான்ட்மாஸ்டரை மோதியுள்ளது. இந்த விபத்தில் லான்ட்மாஸ்டர் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதில் பயணித்த இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார் . பேருந்தில் முன்பக்கம் சேதமடைந்துள்ளது.பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்