• Jan 08 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பிரபல நிறுவனங்களுக்கு அரசு வழங்கிய அனுமதி

Chithra / Jan 1st 2025, 2:32 pm
image

  

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறல் முனையம், காத்திருப்பு பகுதி ஆகியவற்றில் பெண்கள் மற்றும் ஆடவர்களுக்கான ஆடை விற்பனை நிலையங்களை நடத்திச் செல்வதற்கு இரண்டு பிரபல நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, நான்கு விற்பனை நிலையங்களை 3 ஆண்டுகளுக்கு நடாத்திச் செல்வதற்கான இயக்குநர்களைத் தெரிவு செய்வதற்காகச் சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் முறைமையைக் கடைப்பிடித்து விலைமனு கோரப்பட்டிருந்தது. 

அதற்காகப் பிரபல நிறுவனங்களால் மூன்று விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 

அதற்கிணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் பிரகாரம், இரண்டு விற்பனை நிலையங்களை நடத்திச் செல்வதற்காகப் பிரபல நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அத்துடன், ஏனைய விற்பனை நிலையங்களுக்காக மீண்டும் விலைமனுக்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பிரபல நிறுவனங்களுக்கு அரசு வழங்கிய அனுமதி   கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறல் முனையம், காத்திருப்பு பகுதி ஆகியவற்றில் பெண்கள் மற்றும் ஆடவர்களுக்கான ஆடை விற்பனை நிலையங்களை நடத்திச் செல்வதற்கு இரண்டு பிரபல நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நான்கு விற்பனை நிலையங்களை 3 ஆண்டுகளுக்கு நடாத்திச் செல்வதற்கான இயக்குநர்களைத் தெரிவு செய்வதற்காகச் சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் முறைமையைக் கடைப்பிடித்து விலைமனு கோரப்பட்டிருந்தது. அதற்காகப் பிரபல நிறுவனங்களால் மூன்று விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதற்கிணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் பிரகாரம், இரண்டு விற்பனை நிலையங்களை நடத்திச் செல்வதற்காகப் பிரபல நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், ஏனைய விற்பனை நிலையங்களுக்காக மீண்டும் விலைமனுக்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement