• Jun 24 2024

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசு வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Jun 16th 2024, 11:35 am
image

Advertisement

 

மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் பல நாடுகளைச் சேர்ந்த 100,000 இற்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தமது மியன்மார் விஜயத்தின் போது தெரிய வந்ததாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மியன்மாருக்கான விஜயத்தை நிறைவு செய்து நேற்றைய தினம் இலங்கைக்கு மீள திரும்பியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் 49 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விரைவில் மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்யா மற்றும் யுக்ரேன் மோதலில் பங்கேற்பதற்காக ரஷ்யாவிற்குச் சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவினர் ரஷ்யாவிற்குச் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசு வெளியிட்ட அறிவிப்பு  மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் பல நாடுகளைச் சேர்ந்த 100,000 இற்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தமது மியன்மார் விஜயத்தின் போது தெரிய வந்ததாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.மியன்மாருக்கான விஜயத்தை நிறைவு செய்து நேற்றைய தினம் இலங்கைக்கு மீள திரும்பியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் 49 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை விரைவில் மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.இதேவேளை ரஷ்யா மற்றும் யுக்ரேன் மோதலில் பங்கேற்பதற்காக ரஷ்யாவிற்குச் சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ளது.குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.இதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவினர் ரஷ்யாவிற்குச் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement