• Jun 03 2026

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்

shanu / Jun 2nd 2026, 11:25 am
image

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகவும், அவர்களது மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் பிற உடமைகள் கடலில் வைத்து திட்டமிட்ட முறையில் கொள்ளையிடப்படுவதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவரது கல்முனை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.


மேலும், இந்த கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் தலைமையிலான குழுவொன்று செயற்பட்டு வருவதாக மீனவர்களிடமிருந்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த நபர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாட்டாளராகவும் இருப்பதாகப் பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


இவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவது மீனவர்களின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது, அவர்களது வாழ்வாதாரத்தையே கடுமையாக பாதித்து வருவதாகவும் ஹரீஸ் சுட்டிக்காட்டினார். தமது உழைப்பின் பலனை இழந்து வரும் மீனவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


எனவே, இந்த விவகாரம் தொடர்பில் கடற்படை, பொலிஸார், மீன்பிடித் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


அத்துடன், கிழக்கு மாகாண மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நிரந்தர தீர்வொன்றை அரசாங்கம் அவசரமாக முன்வைக்க வேண்டும் என்றும், கடலில் இடம்பெறும் கொள்ளை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதுடன், இந்த விடயத்தில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தினார்.

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகவும், அவர்களது மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் பிற உடமைகள் கடலில் வைத்து திட்டமிட்ட முறையில் கொள்ளையிடப்படுவதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவரது கல்முனை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.மேலும், இந்த கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் தலைமையிலான குழுவொன்று செயற்பட்டு வருவதாக மீனவர்களிடமிருந்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த நபர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாட்டாளராகவும் இருப்பதாகப் பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.இவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவது மீனவர்களின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது, அவர்களது வாழ்வாதாரத்தையே கடுமையாக பாதித்து வருவதாகவும் ஹரீஸ் சுட்டிக்காட்டினார். தமது உழைப்பின் பலனை இழந்து வரும் மீனவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.எனவே, இந்த விவகாரம் தொடர்பில் கடற்படை, பொலிஸார், மீன்பிடித் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.அத்துடன், கிழக்கு மாகாண மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நிரந்தர தீர்வொன்றை அரசாங்கம் அவசரமாக முன்வைக்க வேண்டும் என்றும், கடலில் இடம்பெறும் கொள்ளை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதுடன், இந்த விடயத்தில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement