• Dec 19 2024

வீதிகளில் வசிப்பவர்களைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்ட அரச அதிகாரிகள்!

Chithra / Dec 19th 2024, 8:50 am
image

 

குடியிருக்க வீடுகள் இன்றி வீதிகளில் வசிப்பவர்களைக் கணக்கிடும் பணி நேற்றிரவு எட்டு மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் மேற்கொண்டு வரும் சனத்தொகைக் கணக்கெடுப்பின் ஒரு கட்டமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாதவர்கள் மற்றும் வீதிகளில் வசிப்பவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதற்காக சுமார் 35 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்பட்டதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இவ்வருட தொகைமதிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், அடுத்த 05 நாட்களுக்கு தொகைமதிப்பு நடவடிக்கைகளை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொகைமதிப்பு அலுவலர் இதுவரை வீடுகளுக்குச் சென்று தகவல்களைப் பெறவில்லை என்றால், அது தொடர்பில் 1901 என்ற குறுகிய தொலைபேசி இலக்கம் ஊடாக அறிவிக்குமாறும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொகைமதிப்பு நடவடிக்கைகளை புதுப்பித்து ஒரு மாதத்திற்குள் முதற்கட்ட அறிக்கை வெளியிடப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் வசிப்பவர்களைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்ட அரச அதிகாரிகள்  குடியிருக்க வீடுகள் இன்றி வீதிகளில் வசிப்பவர்களைக் கணக்கிடும் பணி நேற்றிரவு எட்டு மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் மேற்கொண்டு வரும் சனத்தொகைக் கணக்கெடுப்பின் ஒரு கட்டமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாதவர்கள் மற்றும் வீதிகளில் வசிப்பவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.இதற்காக சுமார் 35 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்பட்டதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, இவ்வருட தொகைமதிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், அடுத்த 05 நாட்களுக்கு தொகைமதிப்பு நடவடிக்கைகளை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தொகைமதிப்பு அலுவலர் இதுவரை வீடுகளுக்குச் சென்று தகவல்களைப் பெறவில்லை என்றால், அது தொடர்பில் 1901 என்ற குறுகிய தொலைபேசி இலக்கம் ஊடாக அறிவிக்குமாறும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.தொகைமதிப்பு நடவடிக்கைகளை புதுப்பித்து ஒரு மாதத்திற்குள் முதற்கட்ட அறிக்கை வெளியிடப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement