• Jan 10 2025

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் தொடர்பில் அரசின் அதிரடி முடிவு

Chithra / Jan 5th 2025, 9:25 am
image

  

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை மீண்டும் நீடிக்கப்போவதில்லை என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் வர்த்தகர்களால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார்.

அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை  நேற்றுமுன்தினம் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 34,000 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 48,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் தொடர்பில் அரசின் அதிரடி முடிவு   அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை மீண்டும் நீடிக்கப்போவதில்லை என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார்.எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் வர்த்தகர்களால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார்.அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை  நேற்றுமுன்தினம் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 34,000 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 48,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement