வாகன இறக்குமதியாளர்கள் கடந்த காலங்களில் வாகனம் இறக்குமதி செய்துள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அவர்களுக்கு கோட்டாக்களை பெற்றுக்கொடுக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்துள்ளனர்.
வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலத்துங்க இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
ஏழு வருடங்கள் பழமையான ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்திருக்கிறோம்.
ஜப்பான் போன்ற நாடுகளில் ஒரு வருடத்தில் ஒரு வாகனம் இறக்குமதி செய்வதற்கு செலவழிக்கும் பணத்தில் நான்கு வாகனங்களை கொள்வனவு செய்ய முடியும். அதன்போது எம்மால் செலவுகளை பாரியளவில் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.
அவ்வாறு நான்கு வாகனங்களை கொள்வனவு செய்யும்போது வரியை குறைக்க வேண்டியதில்லை.
ஒரு வருடத்துக்கு ஒரு வாகனத்தை இறக்குமதி செய்யும்போது அறவிடும் வரியை அவ்வாறே அறவிட வேண்டும்.
இவ்வாறென்றால், இதுபோன்ற நான்கு வாகனங்களுக்கான வரியை தனித்தனியாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
எனவே, சாதாரண விலையில் கார்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பையும் மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வாகன இறக்குமதியாளர்களால் வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாமல் போயுள்ளது.
அதன் காரணமாக கடந்த காலங்களில் வாகன இறக்குமதியாளர்களால் வாகன இறக்குமதி செய்துள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு கோட்டாக்களை பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்தார்.
வாகன இறக்குமதிக்கு கோட்டா முறை - அரசாங்கத்துக்கு புதிய யோசனை வாகன இறக்குமதியாளர்கள் கடந்த காலங்களில் வாகனம் இறக்குமதி செய்துள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அவர்களுக்கு கோட்டாக்களை பெற்றுக்கொடுக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்துள்ளனர்.வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலத்துங்க இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,ஏழு வருடங்கள் பழமையான ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்திருக்கிறோம். ஜப்பான் போன்ற நாடுகளில் ஒரு வருடத்தில் ஒரு வாகனம் இறக்குமதி செய்வதற்கு செலவழிக்கும் பணத்தில் நான்கு வாகனங்களை கொள்வனவு செய்ய முடியும். அதன்போது எம்மால் செலவுகளை பாரியளவில் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.அவ்வாறு நான்கு வாகனங்களை கொள்வனவு செய்யும்போது வரியை குறைக்க வேண்டியதில்லை. ஒரு வருடத்துக்கு ஒரு வாகனத்தை இறக்குமதி செய்யும்போது அறவிடும் வரியை அவ்வாறே அறவிட வேண்டும். இவ்வாறென்றால், இதுபோன்ற நான்கு வாகனங்களுக்கான வரியை தனித்தனியாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். எனவே, சாதாரண விலையில் கார்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பையும் மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கலாம்.கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வாகன இறக்குமதியாளர்களால் வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாமல் போயுள்ளது. அதன் காரணமாக கடந்த காலங்களில் வாகன இறக்குமதியாளர்களால் வாகன இறக்குமதி செய்துள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு கோட்டாக்களை பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்தார்.