• Jan 18 2025

புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்ப்பு - அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Chithra / Jan 6th 2025, 8:32 am
image

 

புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தரமான பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மாத்திரமே நாட்டிற்குள் அனுமதிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது வெளிநாட்டு நாணயம் மற்றும் அரச வருமான பிரச்சினைகளுக்கு உதவும் என்று அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதைக் குறைப்பதற்கும், உயர்தர பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதை ஊக்குவிப்பதற்கும் தமது சங்கம் அரசாங்கத்திற்கு ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரேஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க டொலர்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும், அத்துடன் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் ஒரு வாகனத்தை வாங்கவும், அரச வருமானத்தை அதிகரிக்கவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் இறக்குமதியால், சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டில் இருந்து வெளியேறுகின்றன என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார். 

புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்ப்பு - அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை  புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தரமான பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மாத்திரமே நாட்டிற்குள் அனுமதிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.இது வெளிநாட்டு நாணயம் மற்றும் அரச வருமான பிரச்சினைகளுக்கு உதவும் என்று அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதைக் குறைப்பதற்கும், உயர்தர பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதை ஊக்குவிப்பதற்கும் தமது சங்கம் அரசாங்கத்திற்கு ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரேஞ்சிகே தெரிவித்துள்ளார்.இது அமெரிக்க டொலர்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும், அத்துடன் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் ஒரு வாகனத்தை வாங்கவும், அரச வருமானத்தை அதிகரிக்கவும் உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் இறக்குமதியால், சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டில் இருந்து வெளியேறுகின்றன என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now