தைப்பொங்கல் பண்டிக்கைக்கு இன்னும் ஒருவார காலமே எஞ்சியுள்ள நிலையில் அதனைக் கொண்டாட முடியாத வகையில் தற்போது சந்தையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்தல், அரிசியை இறக்குமதி செய்தல் மற்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது.
அத்துடன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்தை அடுத்து, இதுவரையில் 88,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் கடந்த பண்டிகை காலத்தைப் போலவே தற்போதும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பின்னணியில், தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் வர்த்தக அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், அரிசி விற்பனையிலிருந்து விலகியிருப்பதற்கு கொட்டகலை - ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு கொட்டகலையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் செய்ய அரிசிக்கு தட்டுப்பாடு - குற்றம்சாட்டும் வர்த்தகர்கள் சங்கம் தைப்பொங்கல் பண்டிக்கைக்கு இன்னும் ஒருவார காலமே எஞ்சியுள்ள நிலையில் அதனைக் கொண்டாட முடியாத வகையில் தற்போது சந்தையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை விதித்தல், அரிசியை இறக்குமதி செய்தல் மற்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது. அத்துடன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்தை அடுத்து, இதுவரையில் 88,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கடந்த பண்டிகை காலத்தைப் போலவே தற்போதும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறான பின்னணியில், தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் வர்த்தக அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், அரிசி விற்பனையிலிருந்து விலகியிருப்பதற்கு கொட்டகலை - ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு கொட்டகலையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.