• Mar 21 2025

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: இளம்பெண் கைது..!

Sharmi / Mar 21st 2025, 3:15 pm
image

கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் கடந்த 17 ஆம் திகதியன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 18ஆம் திகதியன்று பத்தரமுல்ல சிறப்புப் படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதாக சந்தேக நபரின் மனைவியான 24 வயது பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: இளம்பெண் கைது. கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் கடந்த 17 ஆம் திகதியன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 18ஆம் திகதியன்று பத்தரமுல்ல சிறப்புப் படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதாக சந்தேக நபரின் மனைவியான 24 வயது பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement