தென்கிழக்கு பிரான்சின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (12) தெரிவித்தனர்.
இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த அனைவரும் கிரெனோபிள் ஆல்ப்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் நிரம்பியிருந்த மதுபான நிலையத்துக்குள் நுழைந்த தாக்குதலாளி, ஒரு வார்த்தையும் பேசாமல் கையெறி குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
இது பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படவில்லை என்று தெரிவித்த புலனாய்வார்கள் சம்பவத்தின் நோக்கம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
1968 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அழகிய நகரம் நடத்தியபோது கட்டப்பட்ட ஒலிம்பிக் கிராமத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள மதுபான நிலையத்தில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பிரான்ஸ் மதுபான நிலையத்தில் கைக்குண்டு தாக்குதல் தென்கிழக்கு பிரான்சின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (12) தெரிவித்தனர்.இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.காயமடைந்த அனைவரும் கிரெனோபிள் ஆல்ப்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வாடிக்கையாளர்கள் நிரம்பியிருந்த மதுபான நிலையத்துக்குள் நுழைந்த தாக்குதலாளி, ஒரு வார்த்தையும் பேசாமல் கையெறி குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.இது பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படவில்லை என்று தெரிவித்த புலனாய்வார்கள் சம்பவத்தின் நோக்கம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.1968 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அழகிய நகரம் நடத்தியபோது கட்டப்பட்ட ஒலிம்பிக் கிராமத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள மதுபான நிலையத்தில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.