• Nov 25 2024

வெருகல் பகுதிக்கு விஜயம் செய்த குகதாஸன் எம்.பி..!

Sharmi / Aug 17th 2024, 4:00 pm
image

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவருமான சண்முகம் குகதாஸனை வரவேற்கும் நிகழ்வும், மக்கள் சந்திப்பும் இன்றையதினம்(17) காலை வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது வெருகல்-இலங்கைத்துறை முகத்துவாரம் கண்ணகி அம்மன் ஆலயத்தில், பாராளுமன்ற உறுப்பினர் குகதாஸன் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் இலங்கைத்துறை முகத்துவாரம் கிராம மக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு இலங்கை தமிழரசு கட்சிக்கு சேவையாற்றிய இரண்டு முதியவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமது பிரதேசம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் வெருகல் பிரதேச செயலாளர் க.சுந்தரலிங்கம், முன்னாள் திருமலை நகரபிதா க.செல்வராசா, வெருகல் பகுதியின் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


வெருகல் பகுதிக்கு விஜயம் செய்த குகதாஸன் எம்.பி. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவருமான சண்முகம் குகதாஸனை வரவேற்கும் நிகழ்வும், மக்கள் சந்திப்பும் இன்றையதினம்(17) காலை வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.இதன் போது வெருகல்-இலங்கைத்துறை முகத்துவாரம் கண்ணகி அம்மன் ஆலயத்தில், பாராளுமன்ற உறுப்பினர் குகதாஸன் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் இலங்கைத்துறை முகத்துவாரம் கிராம மக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.அத்தோடு இலங்கை தமிழரசு கட்சிக்கு சேவையாற்றிய இரண்டு முதியவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமது பிரதேசம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் வெருகல் பிரதேச செயலாளர் க.சுந்தரலிங்கம், முன்னாள் திருமலை நகரபிதா க.செல்வராசா, வெருகல் பகுதியின் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement