• Mar 23 2025

மாத்தறையில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு..!

Sharmi / Mar 22nd 2025, 9:21 am
image

மாத்தறை தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்றிரவு(21) 11:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T56 மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள தெவுந்தர கபுகம்புர பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, அதன் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று​ தோட்டாக்கள் என்பன  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



மாத்தறையில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு. மாத்தறை தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் நேற்றிரவு(21) 11:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T56 மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள தெவுந்தர கபுகம்புர பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, அதன் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று​ தோட்டாக்கள் என்பன  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement