• Jan 09 2025

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கப்டில் அறிவிப்பு!

Tharmini / Jan 9th 2025, 12:00 pm
image

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் (Martin Guptill), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை புதன்கிழமை (08) தெரிவித்தார்.

இந்த அறிவிப்பானது அவரது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது.

எனினும், அவர் உலகம் முழுவதும் உள்ள டி20 லீக்களில் தொடர்ந்தும் விளையாடுவார்.

38 வயதான வலது கை துடுப்பாட்ட வீரர், நியூசிலாந்துக்காக 198 ஒருநாள், 122 டி20 மற்றும் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று வடிவ போட்டிகளிலும் 23 சர்வதேச சதங்களை அடித்துள்ளார்.

அவர் இறுதியாக 2022 இல் நியூசிலாந்திற்காக விளையாடினார்.

2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணியில் முக்கிய உறுப்பினராகவும் கப்டில் இருந்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில், பிரெண்டன் மெக்கல்லம் தலைமையிலான அணி உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த போது, குப்தில் 547 ஓட்டங்களுடன் தொடரில் அதிக ஓட்டங்களை பதிவு செய்த வீரர் ஆனார்.

தொடரில் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 163 பந்துகளில் 237 ஓட்டங்கள‍ை விளாசினார், இது ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக தனிநபர் ஓட்டமாக மாறியது.

2021 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு வந்த நியூசிலாந்து அணியின் ஒரு முக்கிய உறுப்பினராகவும் அவர் இருந்தார்.

122 போட்டிகளில் மொத்தமாக 3,531 ஓட்டங்களை குவித்துள்ள கப்டில், நியூஸிலாந்துக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்த முன்னணி வீரராக உள்ளார்.

இது தவிர ஒருநாள் கிரிக்கெட்டில் 7,346 ஓட்டங்களை குவித்துள்ள அவர் அந்த வடிவ கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்காக அதிக ஓட்டங்களை குவித்த ரொஸ் டெய்லர் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கப்டில் அறிவிப்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் (Martin Guptill), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை புதன்கிழமை (08) தெரிவித்தார்.இந்த அறிவிப்பானது அவரது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது.எனினும், அவர் உலகம் முழுவதும் உள்ள டி20 லீக்களில் தொடர்ந்தும் விளையாடுவார்.38 வயதான வலது கை துடுப்பாட்ட வீரர், நியூசிலாந்துக்காக 198 ஒருநாள், 122 டி20 மற்றும் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று வடிவ போட்டிகளிலும் 23 சர்வதேச சதங்களை அடித்துள்ளார்.அவர் இறுதியாக 2022 இல் நியூசிலாந்திற்காக விளையாடினார்.2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணியில் முக்கிய உறுப்பினராகவும் கப்டில் இருந்துள்ளார்.2015 ஆம் ஆண்டில், பிரெண்டன் மெக்கல்லம் தலைமையிலான அணி உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த போது, குப்தில் 547 ஓட்டங்களுடன் தொடரில் அதிக ஓட்டங்களை பதிவு செய்த வீரர் ஆனார்.தொடரில் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 163 பந்துகளில் 237 ஓட்டங்கள‍ை விளாசினார், இது ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக தனிநபர் ஓட்டமாக மாறியது.2021 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு வந்த நியூசிலாந்து அணியின் ஒரு முக்கிய உறுப்பினராகவும் அவர் இருந்தார்.122 போட்டிகளில் மொத்தமாக 3,531 ஓட்டங்களை குவித்துள்ள கப்டில், நியூஸிலாந்துக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்த முன்னணி வீரராக உள்ளார்.இது தவிர ஒருநாள் கிரிக்கெட்டில் 7,346 ஓட்டங்களை குவித்துள்ள அவர் அந்த வடிவ கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்காக அதிக ஓட்டங்களை குவித்த ரொஸ் டெய்லர் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement