• Feb 14 2025

உரமானியம் பெற்றுக் கொண்டால் பாதி விளைச்சல் அரசாங்கத்துக்கு; வரப்போகும் புதிய சட்டம்

Chithra / Feb 13th 2025, 7:42 am
image

 

உரமானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளின் விளைச்சலில் பாதியை அரசாங்கத்துக்கு விற்பனை செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சட்ட மூலமொன்றை உருவாக்குமாறு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே அரசாங்கம் விதித்துள்ள நெல் கொள்வனவு விலை போதுமானதாக இருப்பதாக வடமத்திய விவசாயிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு விலை போதுமானதாக இல்லை என்று நாட்டின் ஏனைய பிரதேச விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் வடமத்திய மாகாண விவசாயிகள் அமைப்பு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  

உரமானியம் பெற்றுக் கொண்டால் பாதி விளைச்சல் அரசாங்கத்துக்கு; வரப்போகும் புதிய சட்டம்  உரமானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளின் விளைச்சலில் பாதியை அரசாங்கத்துக்கு விற்பனை செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.அவ்வாறான சட்ட மூலமொன்றை உருவாக்குமாறு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கிடையே அரசாங்கம் விதித்துள்ள நெல் கொள்வனவு விலை போதுமானதாக இருப்பதாக வடமத்திய விவசாயிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.அரசாங்கத்தின் நெல் கொள்வனவு விலை போதுமானதாக இல்லை என்று நாட்டின் ஏனைய பிரதேச விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் வடமத்திய மாகாண விவசாயிகள் அமைப்பு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement