• Nov 28 2024

அரச உத்தியோகத்தர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு..!

Chithra / Dec 19th 2023, 1:44 pm
image

 

உள்ளுராட்சி தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமையால் தோன்றியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குழுவொன்றை நியமிப்பது பொருத்தமானதென தேர்தல்கள் ஆணையார் நாயகத்தினால் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதற்கமைய, குறித்த அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உடன்பாடு கிடைத்துள்ளது.

அந்த குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் செயற்படுவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அதிகார எல்லையிலிருந்து வெளியேயுள்ள சேவை நிலையத்துக்கு  இடமாற்றம் செய்தமையால், சிரமத்துக்குள்ளான அரசியல் உரிமை கொண்ட அலுவலர் ஒருவர் அது தொடர்பாக மேன்முறையீடு செயற்பாட்டின், நிறுவன தலைவர் அது தொடர்பாகக் கவனம் செலுத்தி குறித்த சேவை நிலையத்தில் அரசியல் கருமங்களிலோ அல்லது அரசியல் பரப்புரைகளில் ஈடுபடாமல் பணியாற்றுவதாக குறித்த அலுவலரிடமிருந்து சத்தியக் கடதாசியொன்று பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அலுவலரின் நிரந்தர சேவை நிலையத்திற்கு கடமைக்கு செல்வதற்கு இடமளித்தல்.

2023-04-25 திகதி தொடக்கம் 2023-04-08 ஆம் திகதி வரையான காலத்தை சம்பளத்துடனான விடுமுறையாக கருதி அடிப்படை  சம்பளம் வழங்குதல். 2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக வேட்புமனு நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ள அலுவலர்கள் 2023-05-08 திகதி 07 -2023 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைய கட்டாயமாகக் கடமைக்கு சமூகமளிக்குமாறு பணித்தல்.

அதற்கமைய, அரசியல் உரிமை கொண்ட அரச அலுவலர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மேற்குறித்த விடயங்கள் அடங்கலாக பொது நிர்வாக சுற்றறிக்கையை வெளியிடுதல் என்பவற்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு.  உள்ளுராட்சி தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமையால் தோன்றியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குழுவொன்றை நியமிப்பது பொருத்தமானதென தேர்தல்கள் ஆணையார் நாயகத்தினால் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய, குறித்த அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உடன்பாடு கிடைத்துள்ளது.அந்த குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் செயற்படுவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தேர்தலில் போட்டியிடும் அதிகார எல்லையிலிருந்து வெளியேயுள்ள சேவை நிலையத்துக்கு  இடமாற்றம் செய்தமையால், சிரமத்துக்குள்ளான அரசியல் உரிமை கொண்ட அலுவலர் ஒருவர் அது தொடர்பாக மேன்முறையீடு செயற்பாட்டின், நிறுவன தலைவர் அது தொடர்பாகக் கவனம் செலுத்தி குறித்த சேவை நிலையத்தில் அரசியல் கருமங்களிலோ அல்லது அரசியல் பரப்புரைகளில் ஈடுபடாமல் பணியாற்றுவதாக குறித்த அலுவலரிடமிருந்து சத்தியக் கடதாசியொன்று பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அலுவலரின் நிரந்தர சேவை நிலையத்திற்கு கடமைக்கு செல்வதற்கு இடமளித்தல்.2023-04-25 திகதி தொடக்கம் 2023-04-08 ஆம் திகதி வரையான காலத்தை சம்பளத்துடனான விடுமுறையாக கருதி அடிப்படை  சம்பளம் வழங்குதல். 2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக வேட்புமனு நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ள அலுவலர்கள் 2023-05-08 திகதி 07 -2023 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைய கட்டாயமாகக் கடமைக்கு சமூகமளிக்குமாறு பணித்தல்.அதற்கமைய, அரசியல் உரிமை கொண்ட அரச அலுவலர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மேற்குறித்த விடயங்கள் அடங்கலாக பொது நிர்வாக சுற்றறிக்கையை வெளியிடுதல் என்பவற்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement