இந்தியாவில் இருந்து இதுவரை 155 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் மேலும் 18 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சர்கள் குழு கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முடிவு செய்தது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து முட்டைகளை தொடர்ந்து இறக்குமதி செய்ய நேற்று (18) கூடிய அமைச்சர்கள் குழு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி. விலையிலும் மாற்றம் samugammedia இந்தியாவில் இருந்து இதுவரை 155 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் மேலும் 18 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சர்கள் குழு கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முடிவு செய்தது.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து முட்டைகளை தொடர்ந்து இறக்குமதி செய்ய நேற்று (18) கூடிய அமைச்சர்கள் குழு தீர்மானித்துள்ளது.இந்நிலையில் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.