• Jan 24 2025

புத்தாண்டில் இலங்கையர்களுக்கு பேரிடி..! உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிப்பு....!

Chithra / Dec 31st 2023, 11:07 am
image

 

உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொத்துரொட்டி மற்றும் ப்ஃரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 25 ரூபாயினாலும்,

சிற்றுண்டி உணவுகளின் விலை 10 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்தார்.


புத்தாண்டில் இலங்கையர்களுக்கு பேரிடி. உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிப்பு.  உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.இதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், கொத்துரொட்டி மற்றும் ப்ஃரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 25 ரூபாயினாலும்,சிற்றுண்டி உணவுகளின் விலை 10 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement