• Oct 19 2024

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்! samugammedia

Tamil nila / Apr 2nd 2023, 5:07 pm
image

Advertisement

அரசாங்கத்தின் பணப்புழக்கத்தில் சுமை இருந்தாலும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.



இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,


“அரசின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் அரச ஊழியர்களுக்கு விசேட ஆதரவுடன் செயற்பட்டு வருகின்றது. இப்போது இவ்வாறானதொரு நிலையில் பல நாடுகளில் வரும் முதலாவது பிரேரணை அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். எனவே எமது நாட்டில், நாங்கள் இதைப் பற்றி நினைக்கவே இல்லை, ஏனென்றால், அரசு ஊழியர்களும் சிரமத்தில் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.


ஏப்ரல் மாதத்துக்குள் பணப் புழக்கத்தில் பெரிய சுமை ஏற்படும். பொதுவாக அரசு ஊழியருக்கு வழங்கப்படும் இந்த மாதம் 25ஆம் திகதிவழங்கப்படும் சம்பளத்தை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன் வழங்க வேண்டும். பணப்புழக்கத்தில் சுமை உள்ளது. ஓய்வூதியம் மற்றும் சமூர்த்தி 10ம் திகதிக்கு முன் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவித்தார்.



அரச ஊழியரைப் பற்றிய ஒரு தனிச்சிறப்பு. கடந்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் ஜனாதிபதி அறிவித்தார்… இந்த ஆண்டு இறுதிக்குள், அரச ஊழியருக்கு சிறப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும்..”


அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் samugammedia அரசாங்கத்தின் பணப்புழக்கத்தில் சுமை இருந்தாலும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,“அரசின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் அரச ஊழியர்களுக்கு விசேட ஆதரவுடன் செயற்பட்டு வருகின்றது. இப்போது இவ்வாறானதொரு நிலையில் பல நாடுகளில் வரும் முதலாவது பிரேரணை அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். எனவே எமது நாட்டில், நாங்கள் இதைப் பற்றி நினைக்கவே இல்லை, ஏனென்றால், அரசு ஊழியர்களும் சிரமத்தில் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.ஏப்ரல் மாதத்துக்குள் பணப் புழக்கத்தில் பெரிய சுமை ஏற்படும். பொதுவாக அரசு ஊழியருக்கு வழங்கப்படும் இந்த மாதம் 25ஆம் திகதிவழங்கப்படும் சம்பளத்தை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன் வழங்க வேண்டும். பணப்புழக்கத்தில் சுமை உள்ளது. ஓய்வூதியம் மற்றும் சமூர்த்தி 10ம் திகதிக்கு முன் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவித்தார்.அரச ஊழியரைப் பற்றிய ஒரு தனிச்சிறப்பு. கடந்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் ஜனாதிபதி அறிவித்தார்… இந்த ஆண்டு இறுதிக்குள், அரச ஊழியருக்கு சிறப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும்.”

Advertisement

Advertisement

Advertisement