• Oct 31 2024

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: ஜனவரியில் ஏற்படவுள்ள மாற்றம்! samugammedia

Tamil nila / Nov 25th 2023, 12:06 pm
image

Advertisement

வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து  5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை  ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவதற்கும்  இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய்  வாழ்வாதாரச் செலவுக் கொடுப்பனவாக வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டது.

அதில் 5,000 ரூபாவை ஏப்ரல் மாதத்திலும் மீதித் தொகையை ஒக்டோபர் மாதத்திலும்  வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கவும்  வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்,  எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் உரிய அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில்  ஒரு பகுதியை வழங்குவது குறித்தும், 

ஜனவரி மாதம் முதல் 5,000 ரூபாவும், ஏப்ரல் மாதம் முதல்  முழுமையாக 10,000 ரூபாவை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் 2003ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் நிதி நிலை அறிக்கையின் புள்ளிவிபரங்களுக்கமைய,  சம்பள அதிகரிப்பை ஜனவரி மாதம் முதல் 

நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரியவந்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: ஜனவரியில் ஏற்படவுள்ள மாற்றம் samugammedia வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து  5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை  ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவதற்கும்  இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய்  வாழ்வாதாரச் செலவுக் கொடுப்பனவாக வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டது.அதில் 5,000 ரூபாவை ஏப்ரல் மாதத்திலும் மீதித் தொகையை ஒக்டோபர் மாதத்திலும்  வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கவும்  வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்,  எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் உரிய அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில்  ஒரு பகுதியை வழங்குவது குறித்தும், ஜனவரி மாதம் முதல் 5,000 ரூபாவும், ஏப்ரல் மாதம் முதல்  முழுமையாக 10,000 ரூபாவை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் 2003ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் நிதி நிலை அறிக்கையின் புள்ளிவிபரங்களுக்கமைய,  சம்பள அதிகரிப்பை ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement