• Oct 19 2024

யாழ். நகரில் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட வேலைத் திட்டம்! samugammedia

Chithra / Apr 6th 2023, 1:28 pm
image

Advertisement

யாழ். நகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் முகமாக பொலிஸாரினால் விசேட வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ். நகரில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றன.

இதன்போது பொருட்கள் கொள்வனவாவார்களின் வாகனங்களை நகரப் பகுதியில் நிறுத்தப்படுவதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக யாழ். மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸார் மற்றும் யாழ்.மாநகர சபையுடன் இணைந்து, யாழ். நகரில் பிரதான வீதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதித்துள்ளனர்.


அத்துடன், பொருட் கொள்வனவிற்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வாகன தரிப்பித்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாத்திரம் வாகனங்களை நிறுத்த முடியும் என ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நகர பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை வாகன நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பும் செயற்பாட்டில் போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நகரில் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட வேலைத் திட்டம் samugammedia யாழ். நகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் முகமாக பொலிஸாரினால் விசேட வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ். நகரில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றன.இதன்போது பொருட்கள் கொள்வனவாவார்களின் வாகனங்களை நகரப் பகுதியில் நிறுத்தப்படுவதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக யாழ். மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸார் மற்றும் யாழ்.மாநகர சபையுடன் இணைந்து, யாழ். நகரில் பிரதான வீதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதித்துள்ளனர்.அத்துடன், பொருட் கொள்வனவிற்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வாகன தரிப்பித்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாத்திரம் வாகனங்களை நிறுத்த முடியும் என ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நகர பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை வாகன நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பும் செயற்பாட்டில் போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement