• Oct 01 2024

யாழ். மாநகர முதல்வர் தேர்வு இன்று: 9 நாட்களுக்கு மாத்திரமே அதிகாரம்! SamugamMedia

Tamil nila / Mar 10th 2023, 9:13 am
image

Advertisement

யாழ்ப்பாண மாநகரசபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து புதிய முதல்வர் தெரிவு இன்று (10) நடைபெறவுள்ளது.


யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 28 ஆம் திகதி முன்னாள் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக  சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.


இதையடுத்து, வடமாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட முதல்வர் இ.ஆனோல்ட் இரண்டு முறை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த போதும், அதை நிறைவேற்ற முடியாமல் பதவிவிலகியிருந்தார்.


இந்த நிலையில் புதிய முதல்வர் தெரிவு இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.


இலங்கையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகிறது.


இந்த நிலையில் யாழ் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலமான 9 நாள்களுக்கு புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

யாழ். மாநகர முதல்வர் தேர்வு இன்று: 9 நாட்களுக்கு மாத்திரமே அதிகாரம் SamugamMedia யாழ்ப்பாண மாநகரசபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து புதிய முதல்வர் தெரிவு இன்று (10) நடைபெறவுள்ளது.யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 28 ஆம் திகதி முன்னாள் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக  சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.இதையடுத்து, வடமாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட முதல்வர் இ.ஆனோல்ட் இரண்டு முறை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த போதும், அதை நிறைவேற்ற முடியாமல் பதவிவிலகியிருந்தார்.இந்த நிலையில் புதிய முதல்வர் தெரிவு இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.இலங்கையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகிறது.இந்த நிலையில் யாழ் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலமான 9 நாள்களுக்கு புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement