• May 01 2024

யாழ். நல்லூர் உற்சவ கால நடைமுறைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்..!! samugammedia

Chithra / Jul 26th 2023, 1:01 pm
image

Advertisement

நல்லூர்த் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளுக்கான கூட்டம் கடந்த 21 ம் திகதி இடம்பெற்றது.  

வழமை போல் மாநகர சபையால் முன்னெடுக்கும் பணிகளை ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்துள்ளோம் என யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் உற்சவமானது 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  அடுத்த மாதம் 15ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் நிறைவுறும். 

வழமை  போல் ஆலய உற்சவம் ஆரம்பிப்பதற்கு முதல் நாளிலிருந்து (20)  அடுத்த 16ஆம் திகதி வரை வீதித் தடைகள் அமுலில் காணப்படும்.

ஆலயச் சூழலில் வீதித்தடை அமுலில் இருந்தாலும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கான நேரத் தளர்வுகள் காணப்படும். 

இதேவேளை ஆலயச் சூழலில் வசிப்போர் மற்றும் ஆலயச் சூழலிலுள்ள வர்த்தக நிலையங்களிற்குச் சென்று வருவோருக்கான அனுமதி அட்டைகளையும் மாநகர சபை வழங்கும்.

மாநகர சபையால் ஆலய வீதியை சுற்றிக் கட்டப்பட்ட சிவப்பு வெள்ளை அடையாளத்திற்கு உள்ளே மாநகர சபையின் கழிவகற்றல் மற்றும் நீர்த்தாங்கி வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இத்துடன் குறித்த எல்லைக்குள் வர்த்தக நடவடிக்கைகளிளோ  விளம்பர நடவடிக்கைகளிளோ ஈடுபட முடியாது.

காவடி எடுக்கும் பக்தர்கள் பருத்தித்துறை வீதியூடாக வந்து செட்டித்தெரு வீதிக்கு சிறிமுருகன் தண்ணீர்ப் பந்தந்தலடியில் பக்தர்கள் இறங்கி காவடிகள் செட்டித்தெரு வீதியூடாக செல்லுதல் வேண்டும்.


டிரோன் கமராக்கள் உற்சவ காலத்தில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் ஒலிபரப்பு சேவைகளைத் தவிர ஏனையவர்களால் ஒலிபரப்புக்களை மேற்கொள்ள முடியாது. 

ஆலயச் சூழலில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு மாநகர சபையால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த வருடத்தைப் போல் அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறையில் காணப்படும் எனத் தெரிவித்தார்

யாழ். நல்லூர் உற்சவ கால நடைமுறைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல். samugammedia நல்லூர்த் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளுக்கான கூட்டம் கடந்த 21 ம் திகதி இடம்பெற்றது.  வழமை போல் மாநகர சபையால் முன்னெடுக்கும் பணிகளை ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்துள்ளோம் என யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நல்லூர் உற்சவமானது 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  அடுத்த மாதம் 15ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் நிறைவுறும். வழமை  போல் ஆலய உற்சவம் ஆரம்பிப்பதற்கு முதல் நாளிலிருந்து (20)  அடுத்த 16ஆம் திகதி வரை வீதித் தடைகள் அமுலில் காணப்படும்.ஆலயச் சூழலில் வீதித்தடை அமுலில் இருந்தாலும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கான நேரத் தளர்வுகள் காணப்படும். இதேவேளை ஆலயச் சூழலில் வசிப்போர் மற்றும் ஆலயச் சூழலிலுள்ள வர்த்தக நிலையங்களிற்குச் சென்று வருவோருக்கான அனுமதி அட்டைகளையும் மாநகர சபை வழங்கும்.மாநகர சபையால் ஆலய வீதியை சுற்றிக் கட்டப்பட்ட சிவப்பு வெள்ளை அடையாளத்திற்கு உள்ளே மாநகர சபையின் கழிவகற்றல் மற்றும் நீர்த்தாங்கி வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இத்துடன் குறித்த எல்லைக்குள் வர்த்தக நடவடிக்கைகளிளோ  விளம்பர நடவடிக்கைகளிளோ ஈடுபட முடியாது.காவடி எடுக்கும் பக்தர்கள் பருத்தித்துறை வீதியூடாக வந்து செட்டித்தெரு வீதிக்கு சிறிமுருகன் தண்ணீர்ப் பந்தந்தலடியில் பக்தர்கள் இறங்கி காவடிகள் செட்டித்தெரு வீதியூடாக செல்லுதல் வேண்டும்.டிரோன் கமராக்கள் உற்சவ காலத்தில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் ஒலிபரப்பு சேவைகளைத் தவிர ஏனையவர்களால் ஒலிபரப்புக்களை மேற்கொள்ள முடியாது. ஆலயச் சூழலில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு மாநகர சபையால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.கடந்த வருடத்தைப் போல் அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறையில் காணப்படும் எனத் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement