• Sep 29 2024

யாழ். மக்களே அவதானம்.. மீண்டும் மிரட்டும் கொரோனா - ஒருவர் உயிரிழப்பு..! samugammedia

Chithra / Apr 20th 2023, 11:29 am
image

Advertisement

கொரோன தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது.

கொவிட்டின் திரிபு வைரஸால் இத்தகைய பாதிப்பு உருவாகியிருந்தது. அதேபோன்று தற்போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது.


யாழ். மக்களே அவதானம். மீண்டும் மிரட்டும் கொரோனா - ஒருவர் உயிரிழப்பு. samugammedia கொரோன தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இதனையடுத்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை, கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது.கொவிட்டின் திரிபு வைரஸால் இத்தகைய பாதிப்பு உருவாகியிருந்தது. அதேபோன்று தற்போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement