• Nov 25 2024

யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Chithra / Jan 7th 2024, 12:54 pm
image

யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது

குறித்த கலந்துரையாடலில்  ஆயிரக்கணக்கான ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததோடு ஜனாதிபதிக்கு நினைவு பரிசில்களையும் கோரிக்கை கடிதங்களையும் வழங்கி வைத்தனர்.

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 

தற்பொழுது நம் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய சவால், பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்துவது, அத்தோடு வடபகுதியில் உள்ள வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில்  ஆராய்ந்து வருகின்றோம்.

குறிப்பாக வடக்கில் நான் வருகை தரும் போதெல்லாம் பிரச்சனை என்ன என கேட்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, அரசியல் தீர்வு என  சில பிரச்சனைகளுடன்  மாத்திரம் என்னிடம் அணுகுவார்கள்.

அதனை விடுத்து நாம் முன்னோக்கி செல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி தான் நான் ஆராய்கின்றேன்.

குறிப்பாக விவசாயத் துறையினை நவீன மயப்படுத்தி நவீன முறையிலான விவசாய முறைகளை விரிவு படுத்துவதன் மூலம் தன்னிறைவு பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதே எமது நோக்கம்.

எனவே எதிர்வரும் காலங்களில்  நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொருளாதாரத்தை மேம்படுத்தல் அவசியமான ஒன்றாகும். 

அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 


யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றதுகுறித்த கலந்துரையாடலில்  ஆயிரக்கணக்கான ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததோடு ஜனாதிபதிக்கு நினைவு பரிசில்களையும் கோரிக்கை கடிதங்களையும் வழங்கி வைத்தனர்.குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்பொழுது நம் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய சவால், பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்துவது, அத்தோடு வடபகுதியில் உள்ள வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில்  ஆராய்ந்து வருகின்றோம்.குறிப்பாக வடக்கில் நான் வருகை தரும் போதெல்லாம் பிரச்சனை என்ன என கேட்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, அரசியல் தீர்வு என  சில பிரச்சனைகளுடன்  மாத்திரம் என்னிடம் அணுகுவார்கள்.அதனை விடுத்து நாம் முன்னோக்கி செல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி தான் நான் ஆராய்கின்றேன்.குறிப்பாக விவசாயத் துறையினை நவீன மயப்படுத்தி நவீன முறையிலான விவசாய முறைகளை விரிவு படுத்துவதன் மூலம் தன்னிறைவு பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதே எமது நோக்கம்.எனவே எதிர்வரும் காலங்களில்  நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொருளாதாரத்தை மேம்படுத்தல் அவசியமான ஒன்றாகும். அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement