• Apr 02 2025

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பதற்றம்..! விசேட அதிரடிப் படையினரால் இளைஞன் கைது! samugammedia

Chithra / Dec 1st 2023, 1:16 pm
image

 

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்று (30)விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரும் மீட்கப்பட்ட ஒரு கிலோ 480 கிராம் கேரள கஞ்சாவும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினரால் கையளிக்கப்பட்டது.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பதற்றம். விசேட அதிரடிப் படையினரால் இளைஞன் கைது samugammedia  யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்று (30)விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரும் மீட்கப்பட்ட ஒரு கிலோ 480 கிராம் கேரள கஞ்சாவும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினரால் கையளிக்கப்பட்டது.சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement