• Jan 19 2025

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக 32 இலட்சம் ரூபா கொள்ளை!

Thansita / Jan 15th 2025, 10:51 pm
image

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.

0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் (Dialog) சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று  கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி அதன் மூலம் இலங்கை வங்கி கணக்கின் Smart pay செயலியில் உள்நுழைந்து ரூபா 200 000/= பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் நேற்றையதினம் 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் வங்கியில் முறையிட்ட பொழுதும், மக்கள் வங்கியின் கணக்கு ஒன்றிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்கின் விபரம் தமது செயலியில் காட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

குறித்த பெண் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முதியவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக 32 இலட்சம் ரூபா கொள்ளை யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் (Dialog) சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று  கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி அதன் மூலம் இலங்கை வங்கி கணக்கின் Smart pay செயலியில் உள்நுழைந்து ரூபா 200 000/= பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் நேற்றையதினம் 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் வங்கியில் முறையிட்ட பொழுதும், மக்கள் வங்கியின் கணக்கு ஒன்றிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்கின் விபரம் தமது செயலியில் காட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.குறித்த பெண் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முதியவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement