நுவரெலியா ஹட்டன் பகுதியிலுள்ள பள்ளிவாசலின் காவலாளி மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் குறித்த காவலாளி உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த சி.எம். இப்ராஹிம் என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாமல் இருப்பதற்காகவே காவலாளி நியமிக்கப்பட்டிருந்ததாக பள்ளிவாசல் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே சந்தேகநபர் பள்ளிக்குள் வருவது மற்றும் உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் பள்ளிவாசல் காவலாளி படுகொலை : சந்தேகநபர் தப்பியோட்டம் - பெரும் பதற்றம். samugammedia நுவரெலியா ஹட்டன் பகுதியிலுள்ள பள்ளிவாசலின் காவலாளி மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் குறித்த காவலாளி உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த சி.எம். இப்ராஹிம் என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாமல் இருப்பதற்காகவே காவலாளி நியமிக்கப்பட்டிருந்ததாக பள்ளிவாசல் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.இதனிடையே சந்தேகநபர் பள்ளிக்குள் வருவது மற்றும் உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.