• Nov 23 2024

மீண்டும் அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கும் சுகாதார வல்லுநர் கூட்டமைப்பு

Chithra / Mar 15th 2024, 11:13 am
image

 

எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மீண்டும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பொருளாதார நீதிக்கான பிரேரணையை நிதியமைச்சகத்திடம் சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதுடன், இதுவரை உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

72 சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கையை நிறுத்தி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் கால அவகாசம் வழங்கியுள்ளதாக கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொடுப்பனவுகளை உயர்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட பிரேரணை நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


மீண்டும் அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கும் சுகாதார வல்லுநர் கூட்டமைப்பு  எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மீண்டும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.பொருளாதார நீதிக்கான பிரேரணையை நிதியமைச்சகத்திடம் சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதுடன், இதுவரை உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.72 சுகாதார நிபுணத்துவ சங்கங்கள் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கையை நிறுத்தி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் கால அவகாசம் வழங்கியுள்ளதாக கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கொடுப்பனவுகளை உயர்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட பிரேரணை நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement