• Nov 23 2024

திருமலையில் கனமழை...! திறக்கப்பட்ட கந்தளாய் குளத்தின் வான் கதவுகள்...! விவசாயிகள் பாதிப்பு...!samugammedia

Sharmi / Jan 12th 2024, 11:09 am
image

திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாகவும் கந்தளாய்  குளத்தின் 10 வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கிண்ணியா பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட, வன்னியனார்மடு, புளியடிக்குடா முதலான பிரதேசங்களில்  செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே  இவ்வாறு நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

இப்பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பெரும் போக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்கை மேற்கொள்ளப்பட்ட  வயல் நிலங்களே கந்தளாய் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதனால் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செய்கை மேற்கொள்ளப்பட்ட  வயல் நிலங்கள்  இம்முறையும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடன் வாங்கியே இம்முறை வேளாண்மை செய்தோம் எனவும் எங்களுக்கு இதற்குரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.

படிச்சல் வாய்க்கால் இல்லாததனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





திருமலையில் கனமழை. திறக்கப்பட்ட கந்தளாய் குளத்தின் வான் கதவுகள். விவசாயிகள் பாதிப்பு.samugammedia திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாகவும் கந்தளாய்  குளத்தின் 10 வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அதேவேளை கிண்ணியா பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட, வன்னியனார்மடு, புளியடிக்குடா முதலான பிரதேசங்களில்  செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே  இவ்வாறு நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.இப்பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பெரும் போக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டுள்ளன.இவ்வாறு செய்கை மேற்கொள்ளப்பட்ட  வயல் நிலங்களே கந்தளாய் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதனால் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செய்கை மேற்கொள்ளப்பட்ட  வயல் நிலங்கள்  இம்முறையும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கடன் வாங்கியே இம்முறை வேளாண்மை செய்தோம் எனவும் எங்களுக்கு இதற்குரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.படிச்சல் வாய்க்கால் இல்லாததனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement