யாழ்ப்பாணம் - தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமுற்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
தாவடியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியதில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது காயமடைந்த நபர் மயக்கமடைந்து, வயிறு மற்றும் இடது கையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்மியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படாதபோதும் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்; படுகாயமுற்ற குடும்பஸ்தர் பலி யாழ்ப்பாணம் - தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமுற்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்த 45 வயதுடைய நே.சர்வேந்திரன் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.தாவடியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியதில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதன்போது காயமடைந்த நபர் மயக்கமடைந்து, வயிறு மற்றும் இடது கையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்மியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பில் சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படாதபோதும் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.