• Jul 25 2025

திருமண தரகுப்பணம் கொடுக்காததால் மன விரக்தியடைந்த தரகர் உயிர்மாய்ப்பு

Chithra / Jul 24th 2025, 11:19 am
image

யாழில், திருமண தரகுப்பணம் கொடுக்காததால் மனவிரக்தியடைந்த தனகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். 

சுன்னாகம் - சூராவத்தை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் தனது ஊரில் திருமண  தரகராக செயற்பட்ட நிலையில் அவருக்கான தரகுப்பணம் கொடுக்கப்படவில்லை. 

இந்த விடயத்தை அவர் இணக்க சபைஇ நீதிமன்றம் வரை கொண்டு சென்றும், அவர் பதிவுபடாத தரகர் என்ற ரீதியில் அவருக்கான பணம் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த திட்கட்கிழமை உரும்பிராய் வடக்கு பகுதியில் உள்ள வயலுக்கு சென்று விஷம் அருந்தி உயிரை மாய்த்துள்ளார்.

பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

திருமண தரகுப்பணம் கொடுக்காததால் மன விரக்தியடைந்த தரகர் உயிர்மாய்ப்பு யாழில், திருமண தரகுப்பணம் கொடுக்காததால் மனவிரக்தியடைந்த தனகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சுன்னாகம் - சூராவத்தை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இவர் தனது ஊரில் திருமண  தரகராக செயற்பட்ட நிலையில் அவருக்கான தரகுப்பணம் கொடுக்கப்படவில்லை. இந்த விடயத்தை அவர் இணக்க சபைஇ நீதிமன்றம் வரை கொண்டு சென்றும், அவர் பதிவுபடாத தரகர் என்ற ரீதியில் அவருக்கான பணம் கொடுக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த திட்கட்கிழமை உரும்பிராய் வடக்கு பகுதியில் உள்ள வயலுக்கு சென்று விஷம் அருந்தி உயிரை மாய்த்துள்ளார்.பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement