• Jul 25 2025

மின்சார சபை சட்டமூலத்தை சட்ட மா அதிபரின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக நிறைவேற்ற மின்சக்தி அமைச்சர் முயற்சி - மரிக்கார் குற்றச்சாட்டு

Chithra / Jul 24th 2025, 11:37 am
image


 

சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் நிறைவேற்ற வேண்டிய மின்சாரசபை திருத்த சட்ட மூலத்தை, மின்சக்தி அமைச்சர் தன்னிச்சையாக நிறைவேற்ற முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்தில் இலங்கை மின்சார சபை திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இயலாமை இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை உள்ளிட்ட பல முக்கிய தரப்பினரை அழைத்து இந்த சட்டமூலத்தில் காணப்பட்ட சிக்கலான விடயங்களை நிவர்த்தி செய்து கொடுத்துள்ளோம்.

இதன் போது இரு காரணிகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே செயல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானமும் எடுக்கப்பட்டது.

ஆனால் தற்போதுள்ள மின்சக்தி அமைச்சர் தன்னிச்சையாக அவரது விருப்பத்துக்கமைய இந்த சட்டம் மூலத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

2024இல் காஞ்சன விஜயசேகர சமர்ப்பித்த அதே சட்டமூலத்தையே தற்போதைய அரசாங்கமும் சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்கங்கள் கால அவகாசம் கோரியும் 7 மாதங்கள் கடந்தும் அமைச்சர் அவர்களை சந்திக்க தயாராக இல்லை.  என்றார். 

மின்சார சபை சட்டமூலத்தை சட்ட மா அதிபரின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக நிறைவேற்ற மின்சக்தி அமைச்சர் முயற்சி - மரிக்கார் குற்றச்சாட்டு  சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் நிறைவேற்ற வேண்டிய மின்சாரசபை திருத்த சட்ட மூலத்தை, மின்சக்தி அமைச்சர் தன்னிச்சையாக நிறைவேற்ற முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,பாராளுமன்றத்தில் இலங்கை மின்சார சபை திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இயலாமை இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை உள்ளிட்ட பல முக்கிய தரப்பினரை அழைத்து இந்த சட்டமூலத்தில் காணப்பட்ட சிக்கலான விடயங்களை நிவர்த்தி செய்து கொடுத்துள்ளோம்.இதன் போது இரு காரணிகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே செயல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானமும் எடுக்கப்பட்டது.ஆனால் தற்போதுள்ள மின்சக்தி அமைச்சர் தன்னிச்சையாக அவரது விருப்பத்துக்கமைய இந்த சட்டம் மூலத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.2024இல் காஞ்சன விஜயசேகர சமர்ப்பித்த அதே சட்டமூலத்தையே தற்போதைய அரசாங்கமும் சமர்ப்பித்துள்ளது.இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்கங்கள் கால அவகாசம் கோரியும் 7 மாதங்கள் கடந்தும் அமைச்சர் அவர்களை சந்திக்க தயாராக இல்லை.  என்றார். 

Advertisement

Advertisement

Advertisement