கன மழை காரணமாக இன்று கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடாத நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொண்டமான்நகர் கிராம அலுவலர் பிரிவில் காணப்படுகின்ற வாய்க்காலில் பெருக்கெடுக்கும் வெள்ளம் பல வீடுகளுக்குள் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் வாய்க்காலில் பெருக்கெடுக்கும் வெள்ளம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள பல வீடுகளின் அத்திபாரம் பாதிக்கப்படும் அளவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளை பாதுகாத்துக்கொள்ள மண்மூடைகளை தற்காலிகமாக அடுக்கி வைத்துள்ள போதும், பாதிப்பை தடுக்க முடியவில்லை என்றும் மலசல கூடங்கள் கூட வெள்ளத்தால் அரிக்கப்பட்டு இடிந்துவிழும் நிலையில் இப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக குறித்த வெள்ள வாய்கால் காரணமாக தாம் பாதிக்கப்படுவதாகவும், வாய்க்காலின் குறிப்பிட்ட சிறிய பகுதி கட்டப்பட்டுள்ள போதும் ஏனைய பகுதிகள் கட்டப்படாது இருப்பதன் காரணமாக வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்கள்,
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், கரைச்சி பிரதேச சபை என்பன குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன மழையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - நீரில் மூழ்கிய பல பகுதிகள் கன மழை காரணமாக இன்று கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடாத நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொண்டமான்நகர் கிராம அலுவலர் பிரிவில் காணப்படுகின்ற வாய்க்காலில் பெருக்கெடுக்கும் வெள்ளம் பல வீடுகளுக்குள் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் வாய்க்காலில் பெருக்கெடுக்கும் வெள்ளம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள பல வீடுகளின் அத்திபாரம் பாதிக்கப்படும் அளவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளை பாதுகாத்துக்கொள்ள மண்மூடைகளை தற்காலிகமாக அடுக்கி வைத்துள்ள போதும், பாதிப்பை தடுக்க முடியவில்லை என்றும் மலசல கூடங்கள் கூட வெள்ளத்தால் அரிக்கப்பட்டு இடிந்துவிழும் நிலையில் இப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.நீண்டகாலமாக குறித்த வெள்ள வாய்கால் காரணமாக தாம் பாதிக்கப்படுவதாகவும், வாய்க்காலின் குறிப்பிட்ட சிறிய பகுதி கட்டப்பட்டுள்ள போதும் ஏனைய பகுதிகள் கட்டப்படாது இருப்பதன் காரணமாக வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்கள்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், கரைச்சி பிரதேச சபை என்பன குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.