• Nov 25 2024

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

Chithra / Mar 31st 2024, 8:01 am
image

மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சுமார் 2.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக  திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மீல்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழச்சி பதிவாகக்ககூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சுமார் 2.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்தோடு, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக  திணைக்களம் அறிவித்துள்ளது.அதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மீல்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழச்சி பதிவாகக்ககூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில், இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement