• Dec 03 2024

காணாமல்போன திருகோணமலை மீனவர்களை ஹெலிகொப்டர் மூலம் தேடும் பணிகள் ஆரம்பம்...!

Anaath / May 25th 2024, 5:13 pm
image

திருகோணமலை, சல்லிக் கடற்கரையில் இருந்து கடந்த 21 ஆம் திகதி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது  காணாமல்போன  இரண்டு மீனவர்களைத் தேடி இன்று காலை முதல் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இந்தத் தேடுதல் நடவடிக்கையில் கடற்படை அதிகாரி ஒருவரும் இணைந்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் வெற்றி பெறாத நிலையில் தற்போது விமானப்படையின் உதவி பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

சல்லியைச் சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் (வயது 44), முருகையா சுயாந்தன் (வயது 32) ஆகிய இரு மீனவர்களே காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல்போன திருகோணமலை மீனவர்களை ஹெலிகொப்டர் மூலம் தேடும் பணிகள் ஆரம்பம். திருகோணமலை, சல்லிக் கடற்கரையில் இருந்து கடந்த 21 ஆம் திகதி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது  காணாமல்போன  இரண்டு மீனவர்களைத் தேடி இன்று காலை முதல் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.இந்தத் தேடுதல் நடவடிக்கையில் கடற்படை அதிகாரி ஒருவரும் இணைந்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலையால் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் வெற்றி பெறாத நிலையில் தற்போது விமானப்படையின் உதவி பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.சல்லியைச் சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் (வயது 44), முருகையா சுயாந்தன் (வயது 32) ஆகிய இரு மீனவர்களே காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement