• Nov 24 2024

நீதிமன்றத்திலிருந்து மாயமான 240 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள ஹெரோயின்!

Chithra / Aug 29th 2024, 3:32 pm
image

 

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 240 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள 12 கிலோ ஹெராயின் போதைப்பொருள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு தொடர்பான இந்த ஹெரோயின் கையிருப்பு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்தது. 

அரச புலனாய்வு சேவை அதிகாரி போன்று தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த குறித்த ஹெரோயின் போதைப்பொருளை எடுத்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ‘தரிந்து யோஷித’ எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர் ஒருவரே ஹெரோயின் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். 

இதேவேளை, சந்தேக நபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்திலிருந்து மாயமான 240 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள ஹெரோயின்  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 240 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள 12 கிலோ ஹெராயின் போதைப்பொருள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு தொடர்பான இந்த ஹெரோயின் கையிருப்பு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்தது. அரச புலனாய்வு சேவை அதிகாரி போன்று தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த குறித்த ஹெரோயின் போதைப்பொருளை எடுத்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ‘தரிந்து யோஷித’ எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர் ஒருவரே ஹெரோயின் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சந்தேக நபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement