மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த உயர்தர மாணவி ஒருவர் குடும்ப வறுமையால் உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி தனது தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை வெதிகும்புர பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோக்சா செவ்வந்தி என்ற 18 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
வீட்டில் தாய், தம்பி மற்றும் அண்ணன் வசித்து வரும் நிலையில், கடந்த 24ம் திகதி காலை கரும்பு வெட்டுவதற்காக தாய் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
தம்பியும் பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். மதியம் மூன்று மணியளவில் தம்பி வந்து பார்த்தபோது அவர் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.
“அம்மா எங்களால் மிகவும் கஷ்டப்படுகின்றார். அதனை பார்க்க வருத்தமாக உள்ளது” என அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணப்பிரச்சினை காரணமாக அவர் படிப்பதில் கூட சிரமப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரைவிட்ட உயர்தர மாணவி; குடும்ப வறுமையால் நடந்த சோகம் மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த உயர்தர மாணவி ஒருவர் குடும்ப வறுமையால் உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 24 ஆம் திகதி தனது தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மொனராகலை வெதிகும்புர பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோக்சா செவ்வந்தி என்ற 18 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவரது தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.வீட்டில் தாய், தம்பி மற்றும் அண்ணன் வசித்து வரும் நிலையில், கடந்த 24ம் திகதி காலை கரும்பு வெட்டுவதற்காக தாய் வீட்டை விட்டு வெளியே சென்றார்.தம்பியும் பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். மதியம் மூன்று மணியளவில் தம்பி வந்து பார்த்தபோது அவர் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.“அம்மா எங்களால் மிகவும் கஷ்டப்படுகின்றார். அதனை பார்க்க வருத்தமாக உள்ளது” என அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பணப்பிரச்சினை காரணமாக அவர் படிப்பதில் கூட சிரமப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.