• Nov 28 2024

5,500 ஆசிரியர் நியமனம்! வௌியானது வர்த்தமானி

Chithra / Jan 24th 2024, 2:44 pm
image

 

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் விசேட மொழிகளுக்கு இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை, 22,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 9 மாதங்களாக விசாரணைக்கு உட்படுத்தி நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால், அந்த நபர்கள் தற்போது பாடசாலைகளில் இருப்பதால், 40,000 ஆசிரியர் வெற்றிடங்களில் இருந்து அவர்களை நீக்க வேண்டும் என தெரிவித்தார்.

5,500 ஆசிரியர் நியமனம் வௌியானது வர்த்தமானி  தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் விசேட மொழிகளுக்கு இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.இதேவேளை, 22,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 9 மாதங்களாக விசாரணைக்கு உட்படுத்தி நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.ஆனால், அந்த நபர்கள் தற்போது பாடசாலைகளில் இருப்பதால், 40,000 ஆசிரியர் வெற்றிடங்களில் இருந்து அவர்களை நீக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement