• Apr 28 2024

கொழும்பிலுள்ள சொகுசு வீட்டில் பயங்கரவாக செயற்பாடுகள்..! சட்டமா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Mar 27th 2024, 10:15 am
image

Advertisement

 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  நபர்கள் தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசங்களில் அமைந்துள்ள இரண்டு சொகுசு வீடுகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது, பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் குறித்த இரு வீடுகளிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த வீடுகள் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள சொகுசு வீட்டில் பயங்கரவாக செயற்பாடுகள். சட்டமா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  நபர்கள் தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசங்களில் அமைந்துள்ள இரண்டு சொகுசு வீடுகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.இந்த மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது, பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் குறித்த இரு வீடுகளிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.அத்துடன், குறித்த வீடுகள் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement