திருமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை -மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை இன்று(29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தனவின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
திருமலையில் சூடுபிடித்த வியாபாரம். பொலிஸாரின் வலைவீச்சில் அதிரடியாக சிக்கிய பெண். திருமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திருகோணமலை -மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை இன்று(29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.அதேநேரம் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தனவின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.