• Feb 03 2025

காற்றாலை மின் கோபுரம் இடிந்து விழுந்ததில் வீடுகள் சேதம்!

Chithra / Feb 3rd 2025, 9:32 am
image


கந்தகுளிய பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை கோபுரத்தின் ஒரு பகுதி திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்விடத்தில் குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து காற்றாலை கோபுரங்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றின் ஒரு பகுதி இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காற்றாலை கோபுரம் இடிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றிலுமாக சேதமடைந்ததோடு, அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இருப்பினும், கோபுரம் இடிந்து விழுந்த நேரத்தில் வீடுகளில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


காற்றாலை மின் கோபுரம் இடிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் கந்தகுளிய பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றது.தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை கோபுரத்தின் ஒரு பகுதி திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.அவ்விடத்தில் குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து காற்றாலை கோபுரங்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றின் ஒரு பகுதி இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.காற்றாலை கோபுரம் இடிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றிலுமாக சேதமடைந்ததோடு, அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.இருப்பினும், கோபுரம் இடிந்து விழுந்த நேரத்தில் வீடுகளில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement