• Jul 28 2025

இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தை கட்டியெழுப்ப முடியும்? பேராயர் கடும் எதிர்ப்பு

Chithra / Jul 27th 2025, 6:19 pm
image


ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

பாரம்பரிய குடும்ப அலகைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் பேராயர் கர்த்தினால் இதன்போது வலியுறுத்தியுள்ளார். 

பல்வேறு பிரசாரங்கள் மற்றும் திருமணத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் தற்காலிக தீர்வுகளைத் தேடுவதால் புதிய தலைமுறை தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஒரே பாலின திருமணம் ஊக்குவிக்கப்படுகிறது. இது ஒரு மனித உரிமையா?, இது எப்படி நடக்கிறது?, இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தை கட்டியெழுப்ப முடியும்? அவர்களுக்கு எப்படி குழந்தைகள் பிறக்கும்? 

முன்னைய காலத்தில் பெற்றோரின் பராமரிப்பின் கீழ் அவர்களின் ஆசீர்வாதத்துடன் இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டனர். 

இத்தகைய திருமணங்கள் இன்றைய திருமணங்களை விடவும் மிகவும் வெற்றிகரமாக காணப்பட்டதாகவும் பேராயர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தை கட்டியெழுப்ப முடியும் பேராயர் கடும் எதிர்ப்பு ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பாரம்பரிய குடும்ப அலகைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் பேராயர் கர்த்தினால் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பல்வேறு பிரசாரங்கள் மற்றும் திருமணத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் தற்காலிக தீர்வுகளைத் தேடுவதால் புதிய தலைமுறை தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒரே பாலின திருமணம் ஊக்குவிக்கப்படுகிறது. இது ஒரு மனித உரிமையா, இது எப்படி நடக்கிறது, இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தை கட்டியெழுப்ப முடியும் அவர்களுக்கு எப்படி குழந்தைகள் பிறக்கும் முன்னைய காலத்தில் பெற்றோரின் பராமரிப்பின் கீழ் அவர்களின் ஆசீர்வாதத்துடன் இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டனர். இத்தகைய திருமணங்கள் இன்றைய திருமணங்களை விடவும் மிகவும் வெற்றிகரமாக காணப்பட்டதாகவும் பேராயர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement