• Nov 24 2024

இளந்தையடியில் பெருந்தொகையான பீடி இலைகள் பறிமுதல்..!

Tamil nila / Mar 4th 2024, 7:59 pm
image

புத்தளம் - நுரைச்சோலை , இளந்தையடி கடற்பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகத்தின் பெயரில் ஒருவர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடையவர் எனவும், இவர் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு கடற்படையினரால் இளந்தையடி கடற்பிரதேசத்தில்  முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இளந்தையடி கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு   இடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  111 பார்சல்களை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர்.

இதன் போது, 111 பார்சல்களிலும் 3440 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் நோக்கில் குறித்த பீடி இலைகள், கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட  3440 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய பார்சல்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு, இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல, இளந்தையடி  மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




இளந்தையடியில் பெருந்தொகையான பீடி இலைகள் பறிமுதல். புத்தளம் - நுரைச்சோலை , இளந்தையடி கடற்பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் சந்தேகத்தின் பெயரில் ஒருவர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடையவர் எனவும், இவர் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.வடமேற்கு கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு கடற்படையினரால் இளந்தையடி கடற்பிரதேசத்தில்  முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இளந்தையடி கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு   இடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  111 பார்சல்களை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர்.இதன் போது, 111 பார்சல்களிலும் 3440 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் நோக்கில் குறித்த பீடி இலைகள், கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட  3440 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய பார்சல்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.கடந்த சில மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு, இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல, இளந்தையடி  மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement