• May 17 2024

டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகள் மூலம் கிடைத்த பெருந்தொகை வருமானம்!

Chithra / Dec 31st 2022, 6:56 am
image

Advertisement

மத்தியதர வர்க்க வீடுகளை டொலருக்கு விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் 5 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் டொலர்களில் வீடுகளை விற்பனை செய்வதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 05 லட்சம் டொலர்கள் எனவும் இவ்வருட இறுதிக்குள் அந்த இலக்கை தாண்ட முடிந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கும் நடுத்தர வர்க்க வீடுகளை விற்பனை செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் வீடுகள் விற்பனை செய்யப்பட்டன

11 வீடுகள் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டுபாய், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஓமன், கட்டார் மற்றும் பிஜி தீவுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்த வீடுகளை வாங்கியுள்ளனர்.

மேலும் 8 வீடுகளை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதன் மூலம் அடுத்த வருடம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகள் மூலம் கிடைத்த பெருந்தொகை வருமானம் மத்தியதர வர்க்க வீடுகளை டொலருக்கு விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் 5 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இவ்வருடம் டொலர்களில் வீடுகளை விற்பனை செய்வதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 05 லட்சம் டொலர்கள் எனவும் இவ்வருட இறுதிக்குள் அந்த இலக்கை தாண்ட முடிந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கும் நடுத்தர வர்க்க வீடுகளை விற்பனை செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் வீடுகள் விற்பனை செய்யப்பட்டன11 வீடுகள் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டுபாய், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஓமன், கட்டார் மற்றும் பிஜி தீவுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்த வீடுகளை வாங்கியுள்ளனர்.மேலும் 8 வீடுகளை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதன் மூலம் அடுத்த வருடம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement