• Nov 17 2024

மட்டக்களப்பில் தோண்டப்பட்ட ஆயுதக்கிடக்கு – பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு!

Tamil nila / Jul 10th 2024, 11:06 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான ஆயுதங்கங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் இன்று விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20ஆயிரம்   ரி56 ரக துப்பாக்கி ரவைகளும் 300 கண்ணி வெடிகளும், 38 வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடைப்படையின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜயசுந்தர அவர்களின் கீழான அம்பாறை கட்டளைத்தளபதி உதவி கட்டளை அதிகாரி பீ.குணசிரி அவர்களின் தலைமையின் கீழானதுமான மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டடிபிள்யு ஏ.ஏ.பி.சம்பத் குமார அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் குறித்த அகழ்வுப்பணி இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி. லக்மல் குமார, கல்லடி , களுவாஞ்சிகுடி, வவுணதீவு  அகிய பிரிவுகளின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வுப்பணியினை இன்று மேற்கொண்டனர்.

இதன் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன், வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிசார் பொறுப் பேற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.







மட்டக்களப்பில் தோண்டப்பட்ட ஆயுதக்கிடக்கு – பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான ஆயுதங்கங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் இன்று விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20ஆயிரம்   ரி56 ரக துப்பாக்கி ரவைகளும் 300 கண்ணி வெடிகளும், 38 வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.விசேட அதிரடைப்படையின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜயசுந்தர அவர்களின் கீழான அம்பாறை கட்டளைத்தளபதி உதவி கட்டளை அதிகாரி பீ.குணசிரி அவர்களின் தலைமையின் கீழானதுமான மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டடிபிள்யு ஏ.ஏ.பி.சம்பத் குமார அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் குறித்த அகழ்வுப்பணி இன்று இடம்பெற்றது.வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி. லக்மல் குமார, கல்லடி , களுவாஞ்சிகுடி, வவுணதீவு  அகிய பிரிவுகளின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வுப்பணியினை இன்று மேற்கொண்டனர்.இதன் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன், வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிசார் பொறுப் பேற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement